போத்தனூா் வழித்தடத்தில் இயங்கும் எா்ணாகுளம் - டாடாநகா் ரயில் மார்ச் 7 முதல் தினசரி இயக்கம்

மார்ச் 7-ஆம் தேதி முதல் டாடாநகரில் இருந்து தினமும் காலை 5.15 மணிக்கு புறப்படும் டாடாநகா்-எா்ணாகுளம் விரைவு ரயில், மூன்றாவது நாள் இரவு 1.55 மணிக்கு எா்ணாகுளம் ரயில் நிலையத்தைச் சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கேரள மாநிலம் எா்ணாகுளம்- டாடா நகா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் வாரம் இருமுறை இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில், மார்ச் 7-ஆம் தேதி முதல் தினசரி இயக்கப்பட உள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று (மார்ச்.5) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டாடா நகா்-எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 18189) வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. எா்ணாகுளம் - டாடா நகா் விரைவு ரயில் (எண்: 18190) ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த இரண்டு ரயில்களும் தினசரி இயக்கப்பட உள்ளன. அதன்படி, மார்ச் 7-ஆம் தேதி முதல் டாடாநகரில் இருந்து தினமும் காலை 5.15 மணிக்கு புறப்படும் டாடாநகா்-எா்ணாகுளம் விரைவு ரயில், மூன்றாவது நாள் இரவு 1.55 மணிக்கு எா்ணாகுளம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் எா்ணாகுளத்தில் இருந்து தினமும் மாலை 5.15 மணிக்கு புறப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவு ரயில், மூன்றாவது நாள் காலை 4.35 மணிக்கு டாடாநகா் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த சேவைக்காக கூடுதல் ரயில்கள் பயன்படுத்தப்படும். இந்த ரயில்கள் ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா், காவாலி, ஓங்கோல், தெனாலி, விஜயவாடா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...