ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 15.78 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

ஏலத்தில் கடந்த வாரத்தை விட 101 மூட்டைகள் குறைந்து காணப்பட்டது. விலையும், 1.71 பைசா குறைந்து காணப்பட்டது. இந்த வாரம் 15.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம் 218.70 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.


கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமையில் கொப்பரை ஏலம் நடைபெறுகிறது. நேற்று (மார்ச்.5) கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.

முதல் தர கொப்பரை 222 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு 80 ரூபாய் முதல், 82.55 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 264 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 40 முதல், 71 ரூபாய் வரை விலை கிடைத்தது.

மொத்தம், 486 கொப்பரை மூட்டைகளை, 72 விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒன்பது வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்தை விட, 101 மூட்டைகள் குறைந்து காணப்பட்டது. விலையும், 1.71 பைசா குறைந்து காணப்பட்டது. இந்த வாரம், 15.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 218.70 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...