மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒரு நாள் சுற்றுலாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி

சுற்றுலாவை தொடங்கி வைக்க வந்த கோவை மாவட்ட ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். இந்தநிகழ்ச்சியில் சுற்றுலா செல்வோர்க்கு தேவையான சிற்றுண்டிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து கோவை ஆரம்ப பயிற்சி மையத்தில், பயிற்சியில் இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை ஒரு நாள் சுற்றுலாவாக ஆனைக்கட்டி அழைத்துச் சென்றனர்.

இதற்கான வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் கொடியசைத்து இன்று (மார்ச்.6) துவக்கி வைத்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுற்றுலா செல்வோர்க்கு தேவையான சிற்றுண்டிகளை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...