சொலவம்பாளையம் பகுதியில் உள்ள பால்கொள்முதல் நிலையத்தில் ரூ.6.40லட்சம் செலவில் சுற்றுசுவர் கட்டும் பணி-MLA தாமோதரன் தொடங்கி வைப்பு

கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஆறு லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் சுற்று சுவர் கட்டுவதற்கான பணியை பூமி பூஜை செய்து சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் இன்று மார்ச் 6ம் தேதி தொடங்கி வைத்தார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள பால் கொள்முதல் நிலையத்தில் சுற்று சுவர் கட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ஆறு லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று சுவர் கட்டுவதற்கான பணியை தொடங்க பூமி பூஜை இன்று மார்ச் 6ம் தேதி 11 மணிக்கு நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இன்று தொடங்கபட்ட பணிகள் மூன்று மாதங்களில் முடியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூமி பூஜையில் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெகன், சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்ராசு என்கிற செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ எட்டிமடைசண்முகம், மதுக்கரை நகர அதிமுக செயலாளர் சண்முகராஜா, ஒன்றிய செயலாளர் சதீஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...