இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு கணினி வழங்கும் விழா - மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நன்றி

கிராமப்புற மாணவர்களிடையே கணினி வழி கற்பித்தலை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளிக்கு கணினி வழங்கிய வாட்சன் நிறுவனத்துக்கும், பரிந்துரை செய்த உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கத்திற்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில், பெரிய குமாரபாளையம், வாட்சன் இன்பிரா தனியார் நிறுவனம் மூலம் கணினி வழங்கும் விழா இன்று 6.3.2024 நடைபெற்றது.



நிகழ்வுக்கு வருகை தந்தவர்களை பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் வரவேற்று பேசினார். அப்போது கிராமப்புற மாணவர்களிடையே நூலகப் பழக்கத்தை வளர்ப்பதற்காக உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் உடுமலையில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு நூலகம் வழங்கி உள்ளதை குறிப்பிட்டு பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார்.

நிகழ்வில் உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கணேஷ்குமார், குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த வாட்சன் தனியார் நிறுவனத்தின் மேலாளர் பிரபாகரன் மற்றும் முதுநிலை அலுவலர் பாஸ்கர் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க தலைவர் லோகேஸ்வரி கிராமப்புற பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கணினி வழி கற்பித்தலும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேஜஸ் ரோட்டரி சங்கத்தின் பரிந்துரையின் பேரில், இன்று வழங்கப்பட்டுள்ள இந்த கணினியை பயன்படுத்தி பள்ளியில் கற்றல் கற்பித்தலை சிறப்பாக மேற்கொண்டு, மாணவர்கள் சிறப்பாக படிக்க வேண்டும் என பள்ளி மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

கிராமப்புற மாணவர்களிடையே கணினி வழி கற்பித்தலை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளிக்கு கணினி வழங்கிய வாட்சன் நிறுவனத்துக்கும், பரிந்துரை செய்த உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கத்திற்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...