கோவை தடாகம் பகுதிகளில் உள்ள சேம்பர்களில் தொடர்ந்து பழைய இரும்புகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சின்னதடாகம் குட்ட வெலியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஜீவானந்தம் என்ற மனோஜ் ஆகிய இருவரும் இரும்புகளை திருடி அந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்காக Hello Truck டாக்ஸியை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னதடாகம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் சோமயனூர் MNK செந்தில் ஆகியோரின் சேம்பரில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக பழைய இரும்பு பொருட்கள் திருட்டுபோனது.

இதைத்தொடர்ந்து தடாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் மற்றும் தடாகம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் அந்தோணி காவலர்கள் முனீஸ், ஜனா, பூபதி, கார்த்தி மற்றும் தனிபிரிவு உதவி ஆய்வாளர் ஐய்யப்பன், தனிப்பிரிவு காவலர் செல்லகண்ணன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வந்தனர்.

இதில் சின்னதடாகம் குட்ட வெலியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஜீவானந்தம் என்ற மனோஜ் ஆகிய இருவரும் இரும்புகளை திருடி அந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்காக Hello Truck டாக்ஸியை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியது தெரியவந்தது.

இந்த வாகனம் இரும்பு பொருட்களை ஏற்றி செல்லும் போது தடாகம் பகுதியில் உள்ள 12 CCTV camera மூலம் கண்டறிந்து இருவரையும் கைது செய்து போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து திருட்டுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் மற்றும் 500 கிலோ இரும்பு ஆகியவை கைப்பற்றப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...