சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த பல்லடம் மாணவர்கள்

சூரத்தில் "Indian Powerlifting federation" சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு விக்னேஷ் வெள்ளி பதக்கத்தையும், ரித்திக் தங்கப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்து ஜூன் மாதம் UK வில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வாகி உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்வேல்-தேவி தம்பதியினரின் மகன் ரித்திக். மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்- ஈஸ்வரி தம்பதியினரின் மகன் விக்னேஷ். ரித்திக் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார். விக்னேஷ் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக பளு தூக்கும் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் "Indian Powerlifting federation" சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போட்டியில் 59 கிலோ எடை பளு தூக்கும் போட்டியில் விக்னேஷ் வெள்ளி பதக்கத்தையும், 83 கிலோ எடைகளான பளு தூக்கும் போட்டியில் ரித்திக் தங்கப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்து ஜூன் மாதம் UK வில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வாகி உள்ளனர்.



போட்டி முடிவுற்ற பின் நேற்று பல்லடம் வந்தடைந்த இருவருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். விக்னேஷின் தந்தை திருப்பூரில் டெய்லராக பணியாற்றி வரும் நிலையில், பயிற்சிக்காக மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆவதாகவும், ஜூன் மாதம் UK வில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பல் தூக்கும் போட்டியில் பங்கேற்க நிதி பற்றாக்குறை உள்ளதாகவும், அதேபோன்று யுபிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சி பெற்று வரும் ரித்திக் தனது தந்தையை இழந்து தனது தாயின் வருமானத்தில் கூடுதலாக பளு தூக்கும் பயிற்சி பெற்று தேசிய அளவிலான போட்டியில் சாதனை படைத்துள்ளதாகவும், தமிழக அரசு தங்களை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச போட்டியில் பங்கேற்க இருவருக்கும் உதவ வேண்டும் என விக்னேஷ் மற்றும் ரித்திக் ஆகியோரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...