உடுமலை பகுதி எழுத்தாளர் முத்து சுப்ரமணியனுக்கு சிறப்பு விருது அறிவிப்பு

நாளை 7-ம் தேதி சென்னை தரமணியில் நடைபெற உள்ள விழாவில் எழுத்தாளர் முத்து சுப்ரமணியனுக்கு பாராட்டு சான்றிதழுடன் ரூபாய் 20 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. இவருக்கு தமிழ் ஆர்வலர்கள், பற்றாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: தமிழ்மொழியின் மேம்பாட்டினை முன்னிறுத்தி செயல்படும் எழுத்தாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி கடந்த 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூய தமிழ் பற்றார்களுக்கான விருதுகள் மாநிலத்தில் 21 நபர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மஸ்தான் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த முத்து சுப்ரமணியன்(75) என்பரும் அடங்குவார்.

இவருக்கு நாளை 7-ம் தேதி சென்னை தரமணியில் நடைபெற உள்ள விழாவில் பாராட்டு சான்றிதழுடன் ரூபாய் 20 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. வணிகவரி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற எழுத்தாளர் முத்து சுப்பிரமணியன் ஏற்கனவே 2019-ல் திருப்பூர் மாவட்டத்திற்கான தமிழ் செம்மல் விருதை பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற முத்து.சுப்ரமணியனுக்கு தமிழ் ஆர்வலர்கள், பற்றாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...