திருப்பூர் மாநகராட்சியில் "எனது குப்பை எனது பொறுப்பு" விழிப்புணர்வு நிகழ்வு – மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், மீதமான உணவுகள், அசைவகழிவுகள், காய்ந்த மலர்கள், தோட்டக்கழிவுகள், முட்டை ஓடுகள் என மக்கும் ஈரக்கழிவுகள் மற்றும் மக்காத உலர் கழிவுகளான பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட சேகாரமாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் "எனது குப்பை எனது பொறுப்பு" என்னும் தலைப்பில் திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி இன்று மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் முன்னிலையில் மண்டலம்-3, 49-வது வார்டு, கே.என்.பி. சுப்ரமணியன் நகர் பகுதியில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதில் காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், மீதமான உணவுகள், அசைவகழிவுகள், காய்ந்த மலர்கள், தோட்டக்கழிவுகள், முட்டை ஓடுகள் என மக்கும் ஈரக்கழிவுகள் மற்றும் மக்காத உலர் கழிவுகளான பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பொருட்கள், உலோகப் பொருட்கள், ரப்பர் பொருட்கள், கிழிந்த துணிகள், காகிதம், அட்டைப் பெட்டிகள், அபாயகரமான குப்பைகளான வயர்கள், கூர்மையான ஆயுதங்கள், பேட்டரிகள் மற்றும் பல்புகள், வர்ணம் மற்றும் பெயிண்ட் டப்பாக்கள், மருத்துவ கழிவுகளான சானிடரி பேட், டயப்பர், மருந்து மாத்திரை மற்றும் ஊசிகள், உள்ளிட்ட சேகாரமாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க கேட்டுக்கொண்டனர்.



முன்னதாக துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி குப்பைகளை எவ்வாறு கையாள்வது தரம் பிரிக்கும் போது ஏற்படும் நன்மை தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கையுறை, தொப்பி, முக கவசம் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மரு.கௌரி சரவணன், மண்டலம் 3&4 உதவி ஆணையாளர் வினோத், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...