அப்பநாயக்கன்பாளையத்தில் ரூ.14.60 லட்சத்தில் சமுதாயக் கூடம் பராமரிப்பு பணி - மேயர் கல்பனா தொடங்கி வைப்பு

பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் முயற்சியில் ரூ.14.60 லட்சம் மதிப்பில் சமுதாய கூடத்தை பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் வேலை தொடங்கப்பட்டது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து பாராமரிப்பு பணியை தொடங்கி வைத்து பழுதடைந்த சமுதாய கூடத்தை பார்வையிட்டார்.


கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி 1வது வார்டில் அரிஜன காலனி பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் உள்ளது. இது தற்போது கதவுகள் உடைந்து பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளது.

இந்த நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் முயற்சியில் ரூ.14.60 லட்சம் மதிப்பில் சமுதாய கூடத்தை பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் வேலை தொடங்கப்பட்டது. இதற்காக நடைபெற்ற பூமி பூஜைக்கு 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் இராஜசேகரன் தலைமை வகித்தார். பகுதி கழக செயலாளர் அருள்குமார் முன்னிலை வகித்தார்.மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பழுதடைந்திருந்த சமுதாய கூடத்தை பார்வையிட்டார்.



இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் சித்ராதங்கவேலு, சாந்தாமணி பச்சைமுத்து, வட்ட கழக செயலாளர் ப.இராஜசேகரன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரபாகரன், மாநகராட்சி உதவி ஆணையாளர் ஸ்ரீதேவி, அதிகாரிகள் எழில், ஜெயின்ராஜ், ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ், மற்றும் கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க – வில் இருந்து லோகநாதன், தங்கவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இராஜா, மகேஸ்வரன், திமுக கட்சி நிர்வாகிகள் சம்பத்குமார், வெங்கடேஷ், ஜெயக்குமார், சின்னச்சாமி, காளிமுத்துசாமி, சண்முகசுந்தரம், ஆனந்தன், ராஜ்கண்ணன், தமிழ்நிதி, லட்சுமணன், சின்னு, கார்த்திக், சாம்ராஜ், இளைஞரணி நிரிவாகிகள் சுபாஷ்கண்ணன், ஜெய்பிரகாஷ், ஆனந்தன், ஜீவானந்தம், அஜய்ஹரிகரன், அன்பு, தங்கராஜ், திவாகர், தீபக், மோகன், மதன், அரவிந்த் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...