கற்பகம் இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் கவுன்சில் மற்றும் ஸ்டார்ட்அப் டிஎன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கற்பகம் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் வசந்தகுமார் அவர்களால் தொழில்நுட்பத் துறை சார்பில் டிஎஸ்டி இக்னிஷன் திட்டத்தின் பெயரில் ஏழு தொழில்முனைவோர்களுக்கு மொத்தத்தொகையாக இருபத்தைந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.


கோவை: கற்பகம் இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்(Karpagam Innovation and Incubation council) மற்றும் ஸ்டார்ட்அப் டிஎன்(Startup TN) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.



இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஸ்டார்ட்அப்களை ஆதரிப்பது மற்றும் புதுமைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில்(DST) டிஎஸ்டி இக்னிஷன் திட்டத்தின்( Ignition grant) பெயரில் ஏழு தொழில்முனைவோர்களுக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இது போன்ற மானியங்கள் கண்டுபிடிப்பாளர்களை ஆதரிப்பதிலும் அவர்களின் யோசனைகளை யதார்த்தமாக(Prototype) மாற்ற உதவுவதிலும் முக்கியமானதாக இருக்கும்.

கற்பகம் இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் கவுன்சில் (KIIC) ஆனது Startup TN, TANCOM, STPI (Software Technology Parks of India) மற்றும் Department of Bio technology, FOE, KAHE உடன் இணைந்து “இம்பைரத்தான்”(Impairathon) என்கிற தேசியஅளவிலான நிகழ்வை நடத்த உள்ளது ”இம்பரத்தான் இன் நோக்கம், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒன்றிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் தேவைகள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாகும்.

இம்பைரத்தானுக்கான போஸ்டரை, சிவராஜா ராமநாதன் CEO, StartupTN அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.



நிகழ்ச்சியில் கற்பகம் கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் வசந்தகுமார், கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.வெங்கடாசலபதி, கற்பகம் பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர்.எஸ்.ரவி, Startup TN இன் பணி இயக்குனர் & தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜா ராமநாதன், டாக்டர்.வி.ஜினுபாலா, கூடுதல் இயக்குனர், சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆஃப் இந்தியா, StartupTN Team லிருந்து சக்திவேல், சி.காயத்ரி மற்றும் எஸ்.ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



எஸ்.பிரபாகரன் தலைவர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் KIIC, தனசேகர், மேலாளர் KIIC, டீன் மற்றும் பேராசிரியர்களும் உடன் இருந்தனர். கற்பகம் கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் ஆர். வசந்தகுமார் பேசுகையில், சந்தை தேவைகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், சமூகம் மற்றும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் சாதகமான பங்களிப்பை வழங்கும் தீர்வுகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொண்டார்.

ஸ்டார்ட்அப் TN ஐச் சேர்ந்த சிவராஜா ராமநாதன் பேசுகையில் சுயமரியாதை, உள்ளுணர்வு மற்றும் அறிவிற்கான (தேடலில்) தேடுதல் ஆகியவை தொழில்முனைவோர் வெற்றிக்கு உண்மையில் முக்கியமானதாக இருக்கும். இந்த குணங்கள் பெரும்பாலும் வெற்றிகரமான தொழில்முனைவோரிடம் காணப்படுகின்றன என கூறினார்.

இறுதியாக கற்பகம் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் வசந்தகுமார் அவர்களால் தொழில்நுட்பத் துறை சார்பில்(DST) டிஎஸ்டி இக்னிஷன் திட்டத்தின்( Ignition grant) பெயரில் ஏழு தொழில்முனைவோர்களுக்கு Startups) மொத்தத்தொகையாக இருபத்தைந்து லட்சம் (Rs 25 lakhs) ரூபாய் வழங்கப்பட்டது.

கற்பகம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர்.ஸ்ரீதர் முத்துசாமி, என்.சம்பத் குமார், பட்டுத்தடம் பிரைவேட் லிமிடெட், விவேகானந்த் காமராஜ், கோகோ விஏபி பிரைவேட் லிமிடெட்டின் டாக்டர்.ஜே.சர்சில் ஏஞ்சல் ஆண்டனி ராஜ், டாக்டர்.சக்கரபாளையம் எம்.மகாலிங்கம், டாக்டர்.எல்.கார்த்திக் மற்றும் பிரபுகுமார் ஆகியோர் மொத்த மானியத் தொகையான இருபத்தைந்து லட்சத்தைப் பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...