பிரதமர் மோடியை கண்டித்து பொள்ளாச்சி அருகே ஆனைமலை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன போராட்டம்

கருப்பு பணத்தை மீட்டு வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் போடப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு என்று அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கருப்பு பணத்தை மீட்டு வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் போடப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் வாக்குறுதி அளித்ததை இதுவரை செயல்படுத்தாமல் வெறும் வாயில் வடை சுட்டதாக கூறி பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் ஆனைமலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் யுவராஜ் தலைமையில் பொதுமக்களுக்கு வடை வழங்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.



பிரதமர் மோடியை கண்டித்து பதாதைகள் ஏந்தியபடி பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதன முறையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கவிதா, பொதுக்குழு உறுப்பினர் மாணிக்கவேல், துணைச் செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...