மூலனூர் வஞ்சியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தாராபுரம் மூலனூர், கன்னிவாடி, வெள்ளகோவில், புதுப்பை, முத்தூர், காங்கேயம், கரூர், சின்னதாராபுரம் உட்பட 100க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூரில் பிரசித்தி பெற்ற வஞ்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தேர் திருவிழா மற்றும் லட்சார்ச்சனை பெருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 42 வது தேரோட்ட திருவிழா விநாயகர் வழிபாடு, முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் தொடங்கியது.

நேற்றிரவு நடைபெற்ற தேரோட்டத்திற்கு கோவில் முதன்மையாளர்கள் ராமநாதன், ராமசாமி ஆகியோர் முறைப்படி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் விநாயகர் வழிபாட்டுடன் லட்சார்ச்சனை நடைபெற்றது. கலச பூஜை, வேள்வியுடன் இரவு லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. திருக்கல்யாணம், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிக்குப் பிறகு திருத்தேர் எழுந்தருளல் நடை பெற்றது.



இரவு திருத்தேர் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தாராபுரம் மூலனூர், கன்னிவாடி, போளரை, வெள்ளகோவில், புதுப்பை, முத்தூர், காங்கேயம் கரூர் சின்னதாராபுரம், உள்ளிட்ட100 மேற்பட்ட பகுதிகளிலிருந்து 1000, பேர்களுக்கு மேல் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

இதில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், திமுக ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் விழாவில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நாளை விழாவின் நிறைவாக தீர்த்தக் காவடி செலுத்துதலும் மற்றும் அக்கினி கம்பம் கிணற்றில் விடுதலும், கொடி இறக்கம், மஞ்சள் நீர், மறு அபி ஷேகம் தீபாராதனையுடன் விழா நிறைவு பெறுகின்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மற்றும் கோவில் குலத்தவர் செய்து செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...