மடத்துக்குளத்தில் இயற்கை விவசாயம் குறித்து கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் - விவசாயிகள் பங்கேற்பு

இயற்கை விவசாயத்தில் பல வருடங்கள் ஈடுபட்டு வெற்றி பெற்ற உடுமலை விவசாயி ஜெகதீசன், கடத்தூர் கலைச்செல்வன் மற்றும் பலர் இயற்கை விவசாயம் ஏன் செய்ய வேண்டும், இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் தமிழ்நாடு வேளாண்மை துறை சார்பில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24 இன் படி இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி மற்றும் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஷிலா மற்றும் பலர் இயற்கை விவசாயத்தின் சிறப்பு குறித்தும், வேளாண்மை துறையில் வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.



இயற்கை விவசாயத்தில் பல வருடங்கள் ஈடுபட்டு வெற்றி பெற்ற உடுமலை விவசாயி ஜெகதீசன், கடத்தூர் கலைச்செல்வன் மற்றும் பலர் இயற்கை விவசாயம் ஏன் செய்ய வேண்டும், இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.



முன்னதாக கேழ்வரகு, குதிரை வாலி அரிசி உள்ளிட்ட தானியங்களின் கண்காட்சி மற்றும் தேங்காய் எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் அரிசி வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்காட்சியை கண்டு களித்தனர். இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கின ஏற்பாட்டினை மடத்துக்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் தேவி மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...