கோவை கவுமார மடத்தின் சொத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு

அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய கள ஆய்வு செய்து, கவுமார மடாலயத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்றும் நடவடிக்கையை 8 வாரங்களில் செய்து முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


கோவை: சென்னை ஐகோர்ட்டில், கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த சிவ பக்தரான சுரேஷ்பாபு என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கோவை மாவட்டம், சின்னவேடம்பட்டியில் உள்ள கவுமார மடாலயத்தை ராமுக்குட்டி என்பவர் நிறுவினார்.

இவர், சரவணம்பட்டியில் தனக்கு சொந்தமாக உள்ள 9.54 ஏக்கர் நிலத்தை தானமாக எழுதி வைத்தார். அதில் இருந்து வரும் வருமானத்தை மடாலயத்திற்காக பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தநிலத்தின் ஒரு பகுதியை ரத்தினம் உள்ளிட்ட சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர்.

இதுகுறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அளித்த புகார் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.



இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர், அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய கள ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்றும் நடவடிக்கையை 8 வாரங்களில் செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...