உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் தீ விபத்து - புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

குப்பைகள், முட் செடிகளில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது? மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் மடத்துக்குளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலையின் இருபுறமும் முற்றிலும் குப்பைகள் மற்றும் முட்செடிகள் அதிகளவு இருந்த நிலையில் இன்று எதிர்பாராத விதமாக இப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்தனர்.



இதுகுறித்து உடுமலை தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு உடுமலை நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த நிலையில் இப்பகுதியில் குப்பைகள், முட் செடிகளில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது யாரேனும் தீ வைத்தார்களா என்ற கோணத்தில் மடத்துக்குளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பழனி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...