உடுமலை அனந்த கோபால பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

இன்று காலை பத்து மணிக்கு கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம், சிறப்பு 10 தரிசனம், 16 அபிஷேகம், கோ பூஜை, சிறப்பு பூஜை, அலங்கார பூஜை மற்றும் மகாதீபானை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட தங்கம்மாள் ஓடையில் அமைந்துள்ளது கோபால பெருமாள் மதுரை வீரன் கோவில். கோவிலில் நீர் காத்த அய்யனார் அப்பன் உடனமர் பூர்ணா தேவி புஷ்பகலா கருப்பசாமி ஆகிய கடவுள்கள் எழுந்தருளி பக்தர்கள் அருள்பாலித்து வருகிறார்கள்.

கோவிலை புணரமைப்பு செய்து கும்பாபிஷேக விழா நடத்துவது என பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தது பணிகள் நிறைவுற்ற நிலையில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நேற்று புதன்கிழமை மங்கல இசை ஸ்ரீ விநாயக வழிபாடு புண்ணியாக வாசகம் பஞ்சகாவிய பூஜை குருசக்கர சூரணம் ரக்ஷா பந்தனன் காப்பு கட்டுதல், கலச ஆவ காணம், கடச தரிசனம், யாகசாலை பிரவேசம், முதற்காலை வீதி மண்டபார்ச்சனை திவ்யாக்குதி பூர்ணாகுதி மகா தீபாரணை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து இரவு அஷ்டபந்தனை மருந்து சார்ர்களும் எந்திர பிரதேசத்தை செய்தாலும் நடைபெற்றது. இன்று காலை வியாழக்கிழமை யாகசாலை முதற்கால விக்னேஸ்வர பூஜையும் புண்ணியாக வசனம் பஞ்சகவியம் அங்குரார் பணம் வேதிகாசனை வாரா தோரண பூஜைகள் அக்னி சந்திர கிரணம் திவ்யாபுரி பூர்ணகுடி தீபாரணை பிரசாதம் வழங்கல் நடைபெற்றது.



தொடர்ந்து இன்று காலை பத்து மணிக்கு கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு 10 தரிசனம், 16 அபிஷேகம், கோ பூஜை, சிறப்பு பூஜை, அலங்கார பூஜைக, மகாதீபானையும் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை உடுமலை அருள்மிகு பிரச்சனை விநாயகர் திருக்கோவில் அர்ச்சகர் அருள்செல்வர் ந.கிரவாச பகவதி தியாகராஜ பாண்டிதர் ஆகம முறைப்படி நடத்தி வைத்தார். இதில் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்துக்குகான ஏற்பாடுகளை திருப்பணி குழு திருக்கோவில் நிர்வாக குழு வாணியர், பொதுநல அறக்கட்டளை இளைஞர் அணி மற்றும் மகளிர் அணியினர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...