ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பச்சரிசி தேவைப்படும் பள்ளிவாசல்கள் தேவை பட்டியலை அனுப்பலாம் – கோவை ஆட்சியர் அறிவிப்பு

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பச்சரிசி உரிய தேவைப் பட்டியலை பள்ளிவாசல் நிர்வாகத்தினா் கோவை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (மார்ச்.7) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு தமிழக அரசால் பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டுகளைப்போலவே 2024-ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

2024-ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்குவதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் பச்சரிசி பெறுவதற்கு கடந்த ஆண்டு மொத்த அனுமதியின்கீழ் பச்சரிசி பெற்ற பள்ளி வாசல்களிடம் இருந்து தேவைப் பட்டியல் வரவேற்கப்படுகிறது.

எனவே, மொத்த அனுமதி பெற உரிய தேவைப் பட்டியலை பள்ளிவாசல் நிர்வாகத்தினா் கோவை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...