உடுமலை அருகே தேவனூர்புதூர் கிராமத்தில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி சிறுமி உயிரிழப்பு

எனது மகள் எந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்ற விவரம் இதுவரையிலும் டாக்டர்கள் உறுதியாக சொல்லவில்லை. எனது கணவர் இறந்து அந்த இழப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் எனது மகள் இறந்து விட்டார் என உயிரிழந்த சிறுமியின் தாயார் கண்ணீருடன் தெரிவித்தார்.


திருப்பூர்: கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையான உடுமலை தாலுகாவிற்கு உட்பட்ட தேவனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி(38). கூலித்தொழிலாளி. இவரது கணவர் லோகநாதன் கடந்த 53 நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் காரணமாகிவிட்டார். அதைத் தொடர்ந்து ராணி தனது குழந்தைகளான பிரியதர்ஷினி(16) நவீன்குமார்(15) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி பிரியதர்ஷினிக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி தற்போது இறந்து விட்டார். இதுகுறித்து ராணி கூறுகையில், எனது மகளுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதுடன் எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றேன். அங்கு டாக்டர் சிகிச்சை அளித்துவிட்டு இயல்பாக உள்ளதாக அனுப்பி வைத்தனர்.

ஆனாலும் காய்ச்சல் குணமாகாததால் செல்லப்பம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றேன். இரண்டு ஆஸ்பத்திரிகளுக்கு சென்றும் எனது மகளுக்கு காய்ச்சல் குறையாததால் பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன். அங்கும் குணமாகவில்லை.

அதைத்தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தேன். அங்கு எனது மகளை பரிசோதித்த டாக்டர்கள் காலம் கடந்து வந்து உள்ளதாகவும், பிழைப்பது இறைவன் கையில் உள்ளதாகவும் கூறி சிகிச்சை அளித்தனர். நானும் மனதை திடப்படுத்திக் கொண்டு மகளுக்கு சிகிச்சை அளித்து வந்தேன். ஆனால் சிகிச்சை பலனின்றி எனது மகள் இறந்து விட்டார்.

எனது மகள் எந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தால் என்ற விவரம் இதுவரையிலும் டாக்டர்கள் உறுதியாக சொல்லவில்லை. எனது கணவர் இறந்து அந்த இழப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் எனது மகள் இறந்து விட்டார். வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாக உள்ளேன் என்றார்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், செல்லப்பம்பாளையம் மற்றும் எரிசனம்பட்டி பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக செல்லும் பொது மக்களை அலைக்கழித்து வருவது தொடர் கதையாக உள்ளது. பின்னர் வேறு வழியின்றி கோவை மாவட்டத்தில் உள்ள ரெட்டியார் மடம் ஆஸ்பத்திரிக்கு சென்றால் அங்கும் சிகிச்சை அளிக்காமல் இங்கேயே திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

இதனால் பொதுமக்கள் தக்க தருணத்தில் சிகிச்சை கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் தேவனூர் புதூர் ஊராட்சி பகுதியில் சாக்கடைகள் முழுவதுமாக தூர்வாரப்படுவதில்லை. மேலும் இப்பகுதியில் பல குழந்தைகள் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் இப்பகுதியில் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்.

எனவே அரசு டாக்டர்கள் உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கும் பொது மக்களின் உடல் நலனை சரியான முறையில் கவனிப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். உடுமலை அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...