மஹா சிவராத்திரியை முன்னிட்டு உடுமலை அருகே பூலாங்கிணர் கிராமத்தில் திருச்சப்பர ஊர்வலம்

வளாவாடியில் நடைபெற்ற திருசப்பர சிறப்பு பூஜையில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், மஹா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது.

இந்தாண்டு மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று முன்னோர்கள் அறிவுறையின் பேரில் பூலாங்கிணர் கிராமத்தில், பாரம்பரிய முறையில், திருச்சப்பரம் தயார் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைப்பெற்றது.

பின்னர் பூலாங்கிணர், ராகல்பாவி, ஆர்.வேலூர், கிருஷ்ணாபுரம், வாளவாடி வழியாகத் திருச்சப்பர ஊர்வலம் நடைப்பெற்றது. கிராம மக்கள், வேளாண் வளம் செழிக்க, தானியங்கள், பழ வகைகள், விவசாய விளை பொருட்களை சப்பாரத்தின் மீது வீசியும், மண்டக படி அமைத்துச் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

இதற்கிடையில் வளாவாடியில் நடைபெற்ற திருசப்பர சிறப்பு பூஜையில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

பின்னர் திருமூர்த்திமலைக்கு திருச்சப்பரம் சென்ற நிலையில் சிறப்புப் பூஜை முதல் நான்கு கால யாகப் பூஜை, அபிஷகம், தீபாராதனை நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...