பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

மகளிர் தின விழாவில் தொழில் மற்றும் சமூகத்துறையில் சேவையாற்றி வரும் கோவை பாவை இன்ஃப்ரோ ஜியோ டெக் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் பிரசன்ன ராகினிக்கு யுவசக்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் NIA கல்வி நிறுவனங்கள் மற்றும் யுவசக்தி மகளிர் நல சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா இன்று நடைபெற்றது.

NIA கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தொழில் மற்றும் சமூகத்துறையில் சேவையாற்றி வரும் கோவை பாவை இன்ஃப்ரோ ஜியோ டெக் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் பிரசன்ன ராகினிக்கு யுவசக்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



மேலும் சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை சாந்தாமணி கலந்து கொண்டு சர்வதேச மகளிர் தின விழா சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து NIA கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் 10 மாணவிகளுக்கு 10 லட்சம் மதிப்புள்ள கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய NIA கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம், ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தன்று NIA கல்வி நிறுவனங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வரும் ஏழை மாணவிகளை மதிப்பெண் அடிப்படையில் தேர்தெடுத்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டுக்கான மகளிர் தின விழாவில் 10 மாணவிகளுக்கு 10 லட்சம் ரூபாய் அளவிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...