தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 3 மாதம் சம்பளம் வழங்க கோரி உடுமலை குட்டைதிடல் பகுதியில் பெண்கள் போராட்டம்

100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு மூன்று மாத சம்பள பாக்கி முழுமையாக வழங்க வேண்டும் என சர்வதேச மகளிர் தினத்தன்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பு குடை பிடித்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டைதிடல் பகுதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உடுமலை ஒன்றிய கமிட்டி சார்பில் 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு மூன்று மாத சம்பள பாக்கி முழுமையாக வழங்க வேண்டும் என சர்வதேச மகளிர் தினத்தன்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பு குடை பிடித்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாடுபட்ட தொழிலாளியை பட்டினி போடாதே, சம்பளத்தை உடனே வழங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் இடப்பட்டது.



அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உடுமலை ஒன்றிய தலைவர் ரங்கராஜ், சிபிஐஎம் கனகராஜ், சிஐடியூ செயலாளர் ஜெகதீசன் மற்றும் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். போராட்டத்தில் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது மேலும் இரண்டு நாளில் சம்பளம் வழங்கப்பட விட்டால் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என அகில இந்திய தொழிலாளர் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...