மீண்டும் பாஜக ஆட்சி அமைய பொதுமக்கள் விருப்பம் - திருப்பூரில் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்வேல் பேட்டி

பல்லடத்திற்கு பிரதமர் மோடி வந்து சென்ற பிறகு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருவதாக மாவட்ட தலைவர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான செந்தில்வேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சி சிறப்பான முறையில் இருந்ததாகவும், மீண்டும் அதே ஆட்சி அமைய வேண்டும் என பொதுமக்கள் விரும்புவதாகவும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோரிக்கைகள் பாஜகவின் தேசிய தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு கட்சியின் மத்திய தலைமைக்கு அனுப்ப இருப்பதாகவும், மேலும் 10 ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகளையும் கிராமங்கள் தோறும் மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பாரதப்பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு பின்பு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும், தினந்தோறும் கட்சியினர் இணைந்து வரக்கூடிய நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் விரைவில் மிகப்பெரிய இணைப்பு விழா நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...