சிவராத்திரியை முன்னிட்டு நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூரில் ஆணிக்கால் காலணி முள்படுக்கை திருவிழா

அதிகாலையில் மகாலட்சுமி சுவாமி முன்பாக பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து வானவேடிக்கையுடன் ஆதிவாசி மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து சாமிகளை கோவிலுக்கு அழைத்து வந்தனர். இதில் பலர் சாமி வந்து அருள்வாக்கு கூறினர்.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூரில் சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தல் மற்றும் ஆணிக்கால் காலணியுடன் பூசாரி நடந்து செல்லும் முள்படுக்கைத் திருவிழா நடைபெற்றது.

கோவை மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன் பாளையத்திலிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ளது பூச்சியூர் கிராமம். இங்கு, ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கும். இங்குள்ள 400 ஆண்டுகள் பழமையான வீரபத்திரசாமி, மகாலட்சுமி, வேட்டைக்காரசாமி கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி, இறைவனை வழிபடுவர்.



இதில் சுற்றிலும் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வர். இதே போல் இந்த ஆண்டும் வழக்கம் போல, பூஜைகள் நடைபெற்றன. இன்று அதிகாலையில் மகாலட்சுமி சுவாமி முன்பாக பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.



தொடர்ந்து வானவேடிக்கையுடன் ஆதிவாசி மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து நடனமாடி சாமிகளை கோவிலுக்கு அழைத்து வந்தனர். இதில் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட பலர் சாமி வந்து அருள்வாக்கு கூறினர்.



தொடர்ந்து கோவில் பூசாரி வீரபத்திர சுவாமி முன்பாக கால்பாதங்களை நோக்கி கூர்மையான ஆணிகள் உடைய மரக்கட்டையால் ஆன காலணிகளை அணிந்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தார். இந்த விழாவில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...