உடுமலை ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

காலயாம பூஜையின்போது சுவாமிக்கு பச்சரிமாவு, நெல்லிப்பொடி, பால், தயிர், நெய், தேன், கரும்புச்சக்கரை, திராட்சை, விபூதி, சந்தனம், குங்குமம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் தில்லை நகரில் நூறாண்டு பழமை வாய்ந் அருள்மிகு ரத்தினாம்பிகை உடனமர் ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை முதல் காலயாம பூஜையும், அதைத் தொடர்ந்து இரண்டாம் காலயாம பூஜையும், மூன்றாம், நான்காம் காலயாம பூஜையும் நடைபெற்றது.

முதலாம் காலயாம பூஜையில் வெள்ளி அலங்காரமும், இரண்டாம் காலயாம பூஜையில் சந்தன அலங்காரமும், மூன்றாம் காலயாம பூஜையில் விபூதி அலங்காரமும், நான்காம் காலயாம பூஜையில் குங்கும அலங்காரமும் சுவாமிக்கு செய்யப்பட்டது.

ஒவ்வொரு காலயாம பூஜையின்போது சுவாமிக்கு பச்சரிமாவு, நெல்லிப்பொடி, பால், தயிர், நெய், தேன், கரும்புச்சக்கரை, திராட்சை, விபூதி, சந்தனம், குங்குமம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்கள் கொண்டு அபிசேகம் செய்யப்பட்டது.

மேலும் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான ஒவ்வொரு அபிஷேக பொருட்களும் சுவாமிக்கு தனித்தனியாக படைத்து வழிபாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு காலயாம பூஜையின் போதும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ரத்தின லிங்கேஸ்வரர் சுவாமியை வழிபாடு செய்தனர். பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சுவாமியை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக தேவராட்டம், பரதநாட்டியம், ஆடல்பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...