தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல்

நானும் கிராமப்புற சூழலில் இருந்து தான் கல்வி கற்று வந்தேன். எனக்கு ABCD யை 6 ஆம் வகுப்பில் தான் கற்றுத்தந்தனர் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி ஊக்கப்படுத்தி பேசினார்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் 43 ஆவது பட்டமளிப்பு விழா இன்று (9.3.2024) நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவிற்கு முந்தைய நாள், பல்கலை கழக வளாகத்தில் பதக்கம் வென்றுள்ள மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களுடன் ஆளுநர் 1 மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடினார்.

100 பேருக்கும் அதிகமானோர் இருந்த அரங்கத்தில், ஆளுநர் ரவியிடம், பல்கலையின் துணை வேந்தர் கீதாலஷ்மி முன்னிலையில், எந்த பயமும் இன்றி துணிவாக ஒரு மனைவி தனது பயணத்தை பற்றி பேசிவந்தார்.

பல்கலையில் இளநிலை தோட்டக்கலை பயிலும் மாணவி செல்வி, ஆளுநரிடம் தனது கல்வி பயணம் பற்றியும், ஆங்கிலம் மீது தனக்கு இருக்கும் ஆர்வம் பற்றியும் பேசினார்.

செல்வி கற்றுகிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவி. தமிழ் வழி கல்வி கற்ற அவர் பள்ளியிலிருந்தே ஆங்கிலம் பேச ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அது சிரமமாக இருந்துள்ளது என்பதால் பின் நாட்களில் ஆங்கிலம் பேச பயிற்சி (Spoken English) எடுத்துள்ளார். ஆங்கில மொழி கற்பதற்கான பிற முயற்சிகளை எடுத்துள்ள அவர், அதை பற்றி ஆளுநரிடம் தைரியமாக தன்னால் முடிந்த அளவு சிறப்பாக பேசிக்கொண்டிருந்த போது சில நொடி லேசாக தடுமாறி நின்றார்.

ஆளுநர் முன்னர் பேசுகிறோம் என்ற அச்சமோ அல்லது அரங்கம் நிறைய ஆட்கள் உள்ளனர் என்ற கூச்சமோ எதுவும் இல்லாமல் துணிவாக பேசிய அவர், லேசாக தடுமாறியதும், ஆளுநர் ரவி குறுக்கிட்டு "நீங்கள் சரியாக தான் பேசிவருகின்றீர்கள். சொல்லப்போனால் நீங்கள் பேசும் ஆங்கிலம் அவ்வளவு அழகாக உள்ளது," என்றார்.

அதன் பின்னர் பேசிய அவர் நானும் கிராமப்புற சூழலில் இருந்து தான் கல்வி கற்று வந்தேன். எனக்கு ABCD யை 6 ஆம் வகுப்பில் தான் கற்றுத்தந்தனர் என்று கூறினார். அதன் பின்னர் மாணவியின் முயற்சிகளை பாராட்டி, தொடர்ந்து தைரியமாக பேசுமாறு ஊக்கப்படுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...