கோவை ராமநாதபுரத்தில் கார் விற்பனையாளர் வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் ரெய்டு

கோயம்புத்தூர் மற்றும் மதுரை ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட மூன்று வாகனங்களில் வந்த அதிகாரிகள் கார் விற்பனையாளார் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் இன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை ராமநாதபுரம் பகுதி கிருஷ்ணசாமி நகரில் வசிப்பவர் அனீஸ். இவர் ராமநாதபுரம் பகுதியில் கியா கார் ஷோரூம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவரது வீட்டிற்கு இன்று காலை E.D. அதிகாரிகள் திடீரென வந்தனர்.

கோயம்புத்தூர் மற்றும் மதுரை ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட மூன்று வாகனங்களில் வந்த அதிகாரிகள் கார் விற்பனையாளார் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அனீஸ் கோவையில் உள்ள பிரபல கார் விற்பனையாளர்களில் ஒருவராக இருக்கும் நிலையில் இவரது வீட்டில் E.D. அதிகாரிகளின் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருகின்றன.

E.D. அதிகாரிகளின் அதிரடி ரெயிடானது, ஐந்து மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் புகார் குறித்த விவரங்கள் பின்னர் தெரியவரும் எதிர்பார்க்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் இன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் ED ரைடில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...