நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகளை உறுதி செய்தல், வாக்குப்பதிவு தொடர்பான நடைமுறை, வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


கோவை: பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள 288 மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கோவை காந்திபுரம் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று (மார்ச்.9) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி தலைமையில் இந்த வகுப்பு நடைபெற்றது.



இந்த பயிற்சி வகுப்பில் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகளை உறுதி செய்தல், வாக்குப்பதிவு தொடர்பான நடைமுறை, முதன்மை வாக்குப் பதிவு (Presiding Officers) அலுவலர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது, வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



இப்பயிற்சி வகுப்பினை தனித் துணை ஆட்சியர்( சமூகப் பாதுகாப்பு திட்டம்) சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் அலுவலர்களுக்கு பயிற்சியினை வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...