தாராபுரம் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

பெண்கள் பணிபுரியும் இடத்திலும் வீட்டிலும் தன் பங்கை சிறப்பாக செயல்படுத்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர் என்று நீதிபதி தர்ம பிரபு கூறினார்.


திருப்பூர்: தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் தாராபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து மகளிர் தின விழா தாராபுரம் நீதிமன்ற வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமை தாங்கி பேசினர்.

இவர் பேசும் போது மகளிர் எல்லா துறைகளிலும் முன்னேறி வருவது போற்றக்கூடியது. மேலும் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் பெண்ணின் பங்கு உறியது பெண்மையை போற்றுவோம் என்றார்.

மேலும் தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிபதி பாபு பேசுகையில், பெண்கள் பணிபுரியும் இடத்திலும் வீட்டிலும் தன் பங்கை சிறப்பாக செயல்படுத்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர் என்று கூறினார். இதில் தாராபுரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கலைச்செல்வன், செயலாளர் ராஜேந்திரன், மூத்த வழக்கறிஞர் எஸ்.கே.கார்வேந்தன், ராமசாமி, தங்கராஜ், மணிவண்ணன், செல்வராஜ், பெண் வழக்கறிஞர் பத்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெண்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பேசினர்.



விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று மற்றும் கலந்து கொண்ட மகளிருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வட்ட சட்டப் பணிகள் குழுவில் சட்ட விழிப்புணர்வு முகாமிற்கு உறுதுணையாக செயல்பட்ட வழக்கறிஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.



சுமார் பெண் ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



மேலும் தாராபுரம் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் புதிதாக தொடங்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...