குண்டடத்தில் 334 பயனாளிகளுக்கு 11 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

பொது மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று முடிந்தவரை அதற்கான தீர்வு அந்தந்த இடங்களில் செய்து கொடுப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரூபாய் ஆர்.வி.எல் திருமண மண்டபத்தில் கலைஞர் மக்கள் சேவை முகாம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.



இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் கலந்து கொண்டார். மேலும் தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் மக்கள் சேவை முகாமில் தேர்வு செய்யப்பட்ட 334 பயனாளிகளுக்கு 11 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் கலந்துகொண்டு பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு அரசு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசு உடனடியாக கொண்டு சேர்ப்பதில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்ட போன நபர்கள் அளிக்கும் விண்ணப்பங்கள், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை காண விண்ணப்பம் ஆகிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், மேலும் பொது மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று முடிந்தவரை அதற்கான தீர்வு அந்தந்த இடங்களில் செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார்.



மேலும் எல்லப்பாளையம் புதூர் ஊராட்சியில் 1024 மனுக்கள் பெறப்பட்டு 538 மனுக்களுக்கு முகாம் முடிவில் அன்றே தீர்வு இயற்றப்பட்டது. மேலும் செங்கோடம்பாளையம் ஊராட்சியில் 643 மனுக்கள் பெறப்பட்டு 205 பயனாளிகளுக்கு முகாம் மூலம் தீர்வு காணப்பட்டது. தற்போது 99பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து 25 பயனாளிகளுக்கு 11 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாக்களையும், 75 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டைகளையும், 219 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள், ஐந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.



10 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம் என மொத்தம் 334 பயனாளிகளுக்கு 11 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...