காங்கேயத்தில் வாடகைக்கு ஓட்டிய வெளி மாநில வாகனங்கள் பறிமுதல் - அபராதம் விதித்து மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை

முத்தூர் ரோடு பிரிவு பகுதியில் தனியார் கார் மற்றும் வேன் ஓட்டுநர்கள் சங்கம் மூலமாக சொந்த பயன்பாட்டு வாகனத்தை, வாடகைக்கு ஓட்டிய வெளிமாநில வாகனங்களை சிறைபிடித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை வாடகைக்கு ஓட்டுவதாக எழுந்த கோரிக்கையை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டு இருந்துவந்தது.

அதை தொடர்ந்து இன்று முத்தூர் ரோடு பிரிவு பகுதியில் தனியார் கார் மற்றும் வேன் ஓட்டுநர்கள் சங்கம் மூலமாக சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு ஓட்டிய வெளிமாநில வாகனங்கனத்தை சிறைபிடித்தனர். இதனை அடுத்து காங்கேயம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.‌



உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் உள்ளூர் வாகன ஓட்டிகளால் சிறைபிடித்த வாகனத்தை பறிமுதல் செய்து மோட்டார் வாகன அலுவலகத்திற்கு 4 வாகனங்களையும் கொண்டு சென்றதுடன் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.



காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் வாடகைக்கு பயன்படுத்தும் கார், வேன், பஸ் என 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. வாடகைக்கு இயக்கப்படும் கார்களுக்கும் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் கார்களுக்கும் காப்பீடு, தகுதிச்சான்று (FC), சாலை வரிகள் ஆகியவைகளில் செலுத்தப்படும் தொகைகள் வித்தியாசத்திற்கு உட்பட்டவை.

இந்நிலையில் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய கார், ஜீப் போன்ற வாகனங்களை வைத்து நாள் வாடகைக்கும், மாதாந்திர வாடகைக்கும், வருட வாடகைக்கும் முடிவு செய்து காங்கேயம் பகுதிகளில் இயக்கப்படுகின்றது. அதுமட்டும் இல்லாமல் வெளி மாநில வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் குறிப்பிட்ட நாட்கள் சுற்றுலா வர அனுமதி பெற்று விட்டு நிரந்திரமாக தொழில் சார்ந்து வருட கணக்கில் இங்கு ஆட்களை ஏற்றி பணிக்கு செல்லும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதில் மேலும் அதிர்ச்சி தகவல் என்னவென்றால் அரசு சார்ந்த கான்ட்ராக்ட் பணிகளுக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு சென்று மீண்டும் மாலை நேரத்தில் கூட்டிவருவதற்கும் இந்த வாகனங்களை இயக்குகின்றனர்.



12 நபர்கள் செல்லக்கூடிய வேனில் 30 நபர்களையும் 9 நபர்கள் செல்லக்கூடிய ஜீப்பில் 22 நபர்களையும், 4 நபர்கள் செல்லக்கூடிய கார்களில் 7 நபர்களையும் அழைத்துச் செல்கின்றனர்.

இப்படி செல்வது உயிருக்கு ஆபத்து என்பதை காட்டிலும் சட்டவிரோதமானது. எந்த அடிப்படையில் இந்த வாகனங்கள் காங்கேயம் பகுதிகளில் இவ்வளவு நாட்களாக இயக்கப்படுகின்றது என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் மாநிலம் விட்டு மாநிலம் வரும்போது எவ்வாறு சோதனை சாவடிகளை கடந்து வருகின்றனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர். தனியார் வாகன ஓட்டிகள். பல்வேறு முறை புகார் கொடுத்தும் இன்று வெளிமாநில 4 வாகனங்களை சிறைபிடித்த பின்னர் மோட்டார் வாகன ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து வாகனங்களை மீட்டு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

காங்கேயம் நகர பகுதிகளில் மட்டுமே சுமார் 100க்கும் மேற்பட்ட வெளிமாநில வேன், (ஓன் போர்டு கார்) தனியார் கார்கள், ஜீப் போன்ற வாகனங்கள் இயக்கப்படுகின்றது. இதனால் வாடகை கார் மற்றும் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக அமைந்துள்ளது. மேலும் இது போல் வாகனங்கள் இயக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் ஓட்டுனர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும் எனவும் மேலும் அப்பகுதி போக்குவரத்து துறை அதிகாரிகளையும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர்.

இது போல் வெளிமாநில வாகனங்களை தமிழகத்தில் வைத்து வாடகைக்கு இயக்கப்படும் போது தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது என்பது நிதர்சனமான உண்மை.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...