காங்கேயம் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம் - பெண் வழக்கறிஞர்கள், ஊழியர்கள் நடனமாடி மகிழ்ச்சி

விழாவில் நீதிமன்ற பெண் ஊழியர்கள், பெண் வழக்கறிஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்கத் செயலாளர் எஸ். செல்வகுமார் உட்பட இளம் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 100மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாராபுரம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள், நடன போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.



காங்கேயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு காங்கேயம் வட்டச் சட்டப் பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான‌ எஸ்.சந்தான கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.எஸ். மாலதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் சி.செந்தில் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

விழாவில் நீதிமன்ற பெண் ஊழியர்கள், பெண் வழக்குகறிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்கத் செயலாளர் எஸ். செல்வகுமார் உட்பட இளம் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 100மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.



இந்த மகளிர் தினவிழாவில் பெண் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கு நடனப்போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கொடுத்து சிறப்பிக்கப் பெற்றனர். மேலும் நீதிபதிகள் பெண்களின் சிறப்புகள் குறித்து அவர்களின் குடும்ப சூழ்நிலைகள் குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார்.



மேலும் பொதுவாழ்க்கையில் பெண்கள் இடையூறுகள் இருந்து எவ்வாறு முன்னேறி வெற்றி அடைவது குறித்தும் எடுத்து கூறினார்கள். மேலும் மகளிர் தினவிழாக்கள் நடைபெறுவது பெண்களை உற்சாகப்படுத்திக்கொள்வதற்கு ஒரு உந்துகோலாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...