தாராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் - 257 வழக்குகளுக்கு தீர்வு

மோட்டார் வாகன விபத்துக்கள் 36, உரிமையியல் வழக்குகள் 100, குற்றவியல் சிறு வழக்குகள் 100, ஜீவனாம்ச வழக்கு இரண்டு, குடும்ப வன்முறை வழக்கு ஒன்று, விவாகரத்து வழக்கு இரண்டு, காசோலை வழக்கு நான்கு, வங்கி வாரா கடன் வழக்கு 12 என மொத்தம் 257 வழக்குகளுக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று காலை தொடங்கப்பட்டது. இதில் தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி எம்.தர்ம பிரபு தலைமையிலும், ஓய்வுபெற்ற நீதிபதி என்.நாகராஜன், குற்றவியல் நடுவர் நீதிபதி எஸ்.பாபு மற்றும் வழக்கறிஞர் எம்பி சிவக்குமார் ஆகியோர் முன்னிலையிலும் மக்கள் நீதிமன்றம் தொடங்கப்பட்டது.



இதில் மோட்டார் வாகன விபத்துக்கள் 36, உரிமையியல் வழக்குகள் 100, குற்றவியல் சிறு வழக்குகள் 100, ஜீவனாம்ச வழக்கு இரண்டு, குடும்ப வன்முறை வழக்கு ஒன்று, விவாகரத்து வழக்கு இரண்டு, காசோலை வழக்கு நான்கு, வங்கி வாரா கடன் வழக்கு 12 என மொத்தம் 257 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இதன் மதிப்பு சுமார் ரூ.20,49,04,141 மேலும் வங்கிக் கடன் வழக்கு 12 இதன் மதிப்பு சுமார் 13,79,000 போன்றவைகளுக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டது. இதில் 638 பயனாளிகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்தப் பணியினை வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...