மடத்துக்குளம் அருகே பாஜகவினர் போராட்டம் - திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரேக்ளா பந்தயம் ரத்து

மைவாடி பிரிவு பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் ரேக்ளாழ பந்தயம் நேற்று நடைபெற இருந்தது. ஆனால் அனுமதி இல்லாமல் பந்தயம் நடத்துவதாக கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளத்தை அடுத்த மைவாடி பிரிவு பகுதியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற இருந்தது.



இந்த நிலையில் முறையான அனுமதி இல்லாமல் நடத்தப்படுவதாக தகவல் அறிந்த மடத்துக்குளம், உடுமலை பகுதி பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ரேக்ளா பந்தயம் நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



அப்போது காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உடுமலை காவல்துறை கண்காணிப்பாளர் சுகுமாரன் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் மற்றும் பாஜக நிர்வாகிகள் 14 பேரை கைது செய்தனர்.

மேலும் பாஜகவினர் கூறுகையில், திமுக சார்பில் நடத்தப்படும் ரேக்ளா பந்தயம் முறையான அனுமதி இல்லாமல் நடத்தப்படுகின்றது. எனவே முறையான அனுமதியோடு நடத்தப்பட வேண்டும். காவல்துறையினர் ரேக்ளா பந்தயம் நடத்த அனுமதி வழங்கினால் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் தெரிவித்தனர்.



இந்த நிலையில் ரேக்ளா பந்தயம் நடத்த பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணமாக திமுக சார்பில் நடைபெற இருந்த ரேக்ளா பந்தயம் ரத்து செய்யபட்டதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.



உடுமலை அருகே திமுக சார்பில் நடைபெற இருந்த ரேக்ளா பந்தயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நேற்று அதிகாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...