கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனை மற்றும் நலத்திட்ட விளக்கம் குறித்த புகைப்பட கண்காட்சி

தேர்தலில் முடிவு எடுப்பதில் பொதுமக்கள் தெளிவாக இருப்பதாகவும், அதில், திமுக வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் நினைப்பதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் விளக்கம் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.



மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.



அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,



தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி அரங்கை இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டதாகவும், குறிப்பாக இந்த பகுதியில் பல்வேறு தரப்பட்ட மக்களும் வந்து செல்வதால் அவர்கள் அனைவரும் தமிழக அரசின் சாதனைகளையும் நலத்திட்ட உதவிகளையும் அது குறித்தான விளக்கங்கள் அடங்கிய இந்த புகைப்பட கண்காட்சியை பார்க்க ஏதுவாக இருக்கும் என்பதால் தான் இங்கு இந்த கண்காட்சி அரங்க அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

வேட்பாளர் குறித்து தலைமையில் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் முடிவு எனவும், அது பேச்சுவார்த்தையில் இருக்கும்போது நாங்கள் கருத்து சொல்வது சரியாக இருக்காது எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

தேர்தலில் பொதுமக்கள் எடுக்க வேண்டிய முடிவில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் எனவும், திமுக தான் சரியாக இருக்கும் அவர்கள் தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்குறார்கள், பல கருத்து கணிப்புகள் அதை தான் சொல்கிறது என்றும் அண்ணாமலை சொல்வதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் எல்லோருமே கலைஞர் பெயரை சொல்லி தான் கூட்டணி சார்பில் ஓட்டு கேட்டு கொண்டு இருக்கிறோம் என்றும் இதில் என்ன புதிதாக தவறு கண்டு பிடித்தார் என்று தெரியவில்லை என்றும், இதுவெல்லாம் ஒரு குற்றச்சாட்டு இதுக்கெல்லாம் பதில் சொல்வதெல்லாம் தேவையில்லாத வேலை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...