வெள்ளலூர் குப்பை கிடங்கை முதலமைச்சர் பார்வை இடாவிட்டால் போராட்டம் - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் அறிவிப்பு

நாளை மறுநாள் கோவைக்கு வரும் முதலமைச்சர் வெள்ளலூர் குப்பை கிடங்கை பார்வையிட்டு அப்பகுதி மக்களின் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவைக்கு வரும் முதல்வர் வெள்ளலூர் குப்பை கிடங்கை பார்வையிட வேண்டும் எனவும், இல்லையெனில் குப்பை கிடங்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பொள்ளாச்சியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்காக விமானம் மூலம் கோவை வரும் முதலமைச்சர் சாலை மார்கமாக பொள்ளாச்சி செல்ல உள்ளார்.



இந்நிலையில் கோவைக்கு வரும் முதலமைச்சர் வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கை பார்வையிட்டு அப்பகுதி மக்களின் பிரச்சனையை உடனடியாக தீர்ப்பதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தி உள்ளார்.

கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கை முறையாக மேலாண்மை செய்யாததால் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு தீர்வும் எட்டப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ள ஈஸ்வரன் நாளை மறுநாள் கோவைக்கு வரும் முதலமைச்சர் வெள்ளலூர் குப்பை கிடங்கை பார்வையிட்டு அப்பகுதி மக்களின் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் எனவும் இல்லையெனில் குப்பை கிடங்கின் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...