கோவையில் நகைப்பட்டறையில் நூறு சவரன் தங்கத்தை திருடிய தம்பதி கைது

நூறு பவுன் நகைகளை திருடிக்கொண்டு தஞ்சாவூர் அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த தம்பதியினரை தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 800 நகைகளை மீட்டனர்.


கோவை: மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி கோவை வடமதுரையில் கடந்த சில ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பாண்டியராஜன் ஆர்.எஸ்.புரம் பகுதியில் பழனிக்குமார் என்பவரது நகைப் பட்டறையில் கடந்த 9 ஆண்டுகளாக நகை செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

9 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பாண்டியராஜன் வேலை செய்து வந்த நிலையில், உரிமையாளர் பழனிகுமார் தனது பட்டறையை பாண்டியராஜனை நம்பி விட்டு விட்டு வெளியே செல்வது வழக்கம். இந்நிலையில் பட்டறையில் உள்ள நகைகளை திருடி இருவரும் வெளியூர் சென்று அதனை விற்று ஜாலியாக இருக்கலாம் என்று தொழிலாளி பாண்டியராஜனிடம் அவருடைய மனைவி உமா மகேஸ்வரி கூறியதாக தெரிகிறது.



இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி நகை பட்டறையில் யாரும் இல்லாத போது 800 கிராம் (100 சவரன்) எடையுள்ள தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளை எடுத்துக் கொண்டு மனைவியை அழைத்துக் கொண்டு பாண்டியராஜன் மாயமானர். நகைகள் மாயமான நிலையில் சிசிடிவி காட்சிகளோடு, பழனிக்குமார் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதியை தேடி வந்தனர்.

இதனிடையே தஞ்சாவூர் அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன் பேரில் விரைந்து சென்ற தனிப்படை போலீசார் பாண்டியராஜனையும், அவருடைய மனைவி உமா மகேஸ்வரியையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 800 கிராம் தங்கத்தையும் பத்திரமாக மீட்டனர்.

இதன் மதிப்பு ரூபாய் 40 லட்சம் என தெரிவித்துள்ள போலீசார், கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே கோவை ஜோஸ் ஆலுக்காஸ் வழக்கில் மனைவியின் திட்டமிடுதலில் கணவன் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கோவையில் மனைவியின் பேராசையால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு தம்பதி கம்பி எண்ணுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...