கோவை கற்பகம் செவிலியர் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு மாணவர்களின் உறுதிமொழி எடுக்கும் விழா

கே.என்.சி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற பி.எஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு மாணவர்களின் 16 வது தொகுதிக்கு உறுதிமொழி எடுக்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையை வழங்கினர்.


கோவை: கற்பகம் செவிலியர் கல்லூரியின் நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பி.எஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு மாணவர்களின் 16 வது தொகுதிக்கு "உறுதிமொழி எடுக்கும் விழா" மார்ச் 9, 2024 அன்று கே.என்.சி ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்தனர்.



இந்நிகழ்ச்சியை சிறபிக்க வந்தவர்கள் தலைமை விருந்தினர் டாக்டர். சுபா சூரியா பஞ்சலிங்கம், எம்.எஸ்.சி (நர்சிங்), பி.எச்.டி, எம்.பி.ஏ, செவிலியர் சேவைத் தலைவர், கஸ்தூரிபா மருத்துவமனை, மணிப்பால் மாநிலம் மற்றும் சிறப்பு அழைப்பாளர் கர்னல் டாக்டர். வி.வெங்கடேசன், வி.எஸ்.எம், மருத்துவ இயக்குநர், கற்பகம் மருத்துவமனை; திரு. சிவகுமார், பொது மேலாளர், கற்பகம் மருத்துவமனை. இந்நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனத்தினால் ஆரம்பிக்கப்பட்டது.



கற்பகம் செவிலியர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் சுதா வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் பேராசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு குத்துவிளக்கேற்றி, பின்னர் சிவகாமி, உதவிப் பேராசிரியர் மாணவிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



இந்த நாளின் முக்கியத்துவம் பேராசிரியர் இலக்கியாவால் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர் ஊக்கமளிக்கும் உரையை வழங்கினார். இணைப் பேராசிரியர் சாந்தா, இணைப் பேராசிரியர் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது. தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...