கோவையில் வரும் சனிக்கிழமை வரை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என அறிவிப்பு

கோவையில் நேற்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் வரும் சனிக்கிழமை வரை குறைந்த பட்சம் 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகுமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


கோவை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மார்ச்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் நேற்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் வரும் சனிக்கிழமை வரை குறைந்த பட்சம் 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகுமென்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல, சென்னையில் நேற்று 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் இன்று (மார்ச்.11) முதல் வரும் வெள்ளிக்கிழமை (15ம் தேதி) வரை வெப்பம் 35 டிகிரி வரை பதிவாகும் என்றும், சனிக்கிழமை 36 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரையில் நேற்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் இன்று முதல் வரும் வியாழக்கிழமை (14ம் தேதி) வரை வெப்பம் 38 டிகிரி வரை பதிவாகுமென்றும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வெப்பம் 39 டிகிரி வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுவையில் நேற்று 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில், வரும் வியாழக்கிழமை (14ம் தேதி) வரை வெப்பம் 34 டிகிரி வரை பதிவாகும் என்றும், வெள்ளி, சனிக்கிழமையன்று 35 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிற்புக்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...