குண்டடத்தில் ரூ.14.84 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம் - அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

குண்டடத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.53.00 இலட்சம் மதிப்பீட்டிலும், சங்கரண்டாம்பாளையத்தில் ரூ.53.00 இலட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ. 1.06 கோடி மதிப்பீட்டில் கால்நடை கிளை மருந்தகம் புதிய கட்டடங்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.



திருப்பூர்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.14.84 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.13.78 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்து, கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் குண்டடம் மற்றும் சங்கரண்டாம்பாளையம் ஆகிய இடங்களில் கால்நடை கிளை மருந்தகங்களை திறந்து வைத்தனர்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது, முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எந்தவொரு திட்டமானலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் நமது மாவட்டங்களில் இருக்கக்கூடிய நலத்திட்ட உதவிகள் எல்லாம் விரைவாக மக்களுக்கு மக்களுடைய பயன்பாட்டு ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றார்.

அந்த வகையில் இன்னைக்கு அனைத்து மாவட்டங்களிலும் இன்றைக்கு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் உங்களுடைய ஆதரவோடு 2021 ஆம் ஆண்டு மே திங்கள் 7-ம் நாள் முதலமைச்சராக பொறுப்பேற்றார்கள். அந்த காலகட்டம் என்பது ஒரு கொரோனா காலகட்டம் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத ஒரு சூழ்நிலையில் நாம் தவித்துக் கொண்டிருந்தோம்.

எனவே அந்த கட்டத்திலே முதலமைச்சராக பொறுப்பேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதி எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 என்கிற மகத்தான திட்டத்தை வழங்கியது வரை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

முதலமைச்சர் பொறுப்பேற்றுக்கொண்டவுடன் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம், பள்ளிக்குழந்தைகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், விடியல் பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, மக்களை தேடி மருத்துவம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

வேளாண்மைத்துறையின் சார்பில் வேளாண்மைத்துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்து அதன் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், வேளாண்மைக்கான கருவிகள் வழங்குற நிகழ்வு, நிலத்தடி நீரை மேம்படுத்துகிற திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். 20 ஆண்டுகாலம் காத்திருந்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், ஒத்தக்கடையில் ரூ.3.99 கோடி மதிப்பீட்டில் பல்லடம் தாராபுரம் சாலை முதல் குங்குமம்பாளையம் வரையிலும், ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் கள்ளிப்பாளையம் குங்குமம்பாளையம் வரையிலும், ரூ.2.92 கோடி மதிப்பீட்டில் கண்ணாங்கோவில் ஊராட்சியில் உ.ஆலம்பாளையம் முதல் குள்ளாயிபாளையம் வரையிலும் 61601 மொத்தம் ரூ.13.78 கோடி தார் சாலைகள் அமைக்கும் பணியினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.



அதனைத் தொடர்ந்து, குண்டடம் ஊராட்சி ஒன்றியம், குண்டடத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.53.00 இலட்சம் மதிப்பீட்டிலும், சங்கரண்டாம்பாளையத்தில் ரூ.53.00 இலட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ. 1.06 கோடி மதிப்பீட்டில் கால்நடை கிளை மருந்தகம் புதிய கட்டடங்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். 

இந்நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) பூகழேந்தி, உதவிக்கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) இளம்பூரணம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...