காலவதியான சுங்கசாவடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம்

காலவதியான சுங்கசாவடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் காலவறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாம் நபர் வாகன இன்சூரன்ஸ் உயர்வு, வட்டார போக்குவரத்தக் கழக அலுவலகங்களில் கட்டண உயர்வு, டீசல், பெட்ரோல் மீதான வாட் வரி அதிகரிப்பு, காலவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுததி வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கதினர் கூறுகையில், இந்த வேலை நிறுத்தத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் லாரிகள் ஓடாது எனவும், இதனால் நாள் ஒன்றுக்கு 150 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் பால், தண்ணீர் மற்றும் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடைபடாது என தெரிவித்தனர். உடனடியாக மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என கூறினர்.

அதேபோல் தொழிற்துறையினர், வியாபாரிகள், எளிய ரக வாகன உரிமையாளர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...