வெள்ளக்கோவிலில் தேர் திருவிழாவில் பாட்டு கச்சேரி பார்த்துக்கொண்டிருந்த சிறுமி கூட்டு பலாத்காரம் - 6 பேரிடம் போலீசார் விசாரணை

கோவில் முன்பு உள்ள திடலில் நடந்து கொண்டிருந்த பாட்டுக் கச்சேரியை பார்த்துக்கொண்டிருந்த 17 வயது சிறுமியை இரண்டு நபர்கள் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று பின்னர் பலர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளக்கோவிலில் கடந்த மூன்று நாட்களாக 08,09,10 ஆகிய தேதிகளில் வீரகுமாரசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. அந்த திருவிழாவில் பாட்டு கச்சேரி கேட்டிருந்த 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டதாக 6 நபர்களை பிடித்து வெள்ளக்கோவில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலனூர் பகுதியைச் சேர்ந்த தாய் விவசாயம் செய்து வருகிறார். அவருடைய மகள் 17 வயது மாணவி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் வெள்ளகோவில் தேர்திருவிழாவிற்கு இரண்டாம் நாள் 9ஆம் தேதி இரவு தேர்த்திருவிழாவுக்கு தாய் வந்த நிலையில் பின்னர் 17 வயது மகளும் போன் மூலம் தெரிவித்துவிட்டு அதே தேர் திருவிழாவிற்கு வந்துள்ளார்.

பின்னர் கோவில் முன்பு உள்ள திடலில் (விஜய்டிவி புகழ் செந்தில், ராஜலக்ஷ்மி) பாட்டுக் கச்சேரி நடந்துள்ளது. அப்போது இருவரும் பாட்டுக் கச்சேரியை கேட்டுக்கொண்டிருந்தனர். மகள் முன்வரிசையில் அமர்ந்து பாட்டுக்கச்சேரி கேட்க சென்றுள்ளார். பின்னர் திடீரென சிறுமி அப்பகுதியில் காணவில்லை.

பதறியடித்த தாய் பல்வேறு பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் 10தேதி அதிகாலை சுமார் 3 மணியளவில் மகள் வந்து விட்டார். என்ன நடந்தது என தாய் கேட்க என்னை இருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாகவும் பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டிற்குள் ஒரு அறையில் வைத்து இருவரும் மாறி மாறி உடலுறவு கொண்டதாகவும், அதன் பின்னர் அங்கிருந்து இரவில் ஒருவர் மட்டும் தன்னை ஸ்கூட்டில் அழைத்து கொண்டு சென்றபோது வேறொரு பைக்கில் வந்த இரண்டு நபர்கள் ஸ்கூட்டி மறித்து சிறுமியை பைக்கில் ஏற்றிக்கொண்டு பின்னால் இருந்த நபர் சிறுமியிடம் சில்மிஷம் செய்து கொண்டு சிறிதுதூரம் வந்ததும், அங்கிருந்த ஒரு வெள்ளைக்காரில் ஏற்றிக்கொண்டு பைக்கில் பின்னால் உட்கார்ந்து இருந்த நபர் காரை ஓட்ட பைக்கை ஓட்டி வந்த நபர் சில்மிஷம் செய்துவந்ததாகவும், பின்னர் பைக்கை ஓட்டி வந்த நபர் தான் இறங்கும் இடம் வந்து விட்டதாக கூறி இறங்கி கொண்டதாகவும் அதன் பின்னர் கார் கொஞ்ச தூரம் இருட்டான இடத்திற்கு போய் காரை நிறுத்தி காரை ஓட்டி வந்த நபர் சிறுமியை கட்டாயப்படுத்தி மிரட்டியும் பலமுறை உடலுறவு கொண்டதாகவும் அதன் பின்சிறுமியை காரில் அழைத்து வந்து வேறு இடத்தில் இன்னொரு காரில் இரண்டு பேருடன் அனுப்பி கோயிலுக்கு அருகில் கொண்டு போய் விட்டு விட்டு வருமாறு சொன்னதாகவும் காரில் அழைத்து வந்து கோவில் முன் பகுதியில் இறக்கிவிட்டு போனதாக சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் பின்னர் வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் நேற்று இரவு 2 இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் 4 பேரை பிடித்து வெள்ளகோவில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் உள்ள இளைஞர்கள் எந்த பகுதியை சார்ந்தவர்கள் என்பது காவல்துறையினர் ரகசியமாக கட்டிவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...