போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கிணத்துக்கடவு பகுதியில் அதிமுக மனித சங்கிலி போராட்டம்

கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்பு செயலாளாருமான செ.தாமோதரன் தலைமையில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



கோவை: தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருவதை திமுக அரசு தடுக்க தவறியதாக கூறி தமிழக முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.



இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்பு செயலாளாருமான செ.தாமோதரன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கைகளை கோர்த்து படி மனித சங்கிலியாக நின்று திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இதில் கிணத்துக்கடவு நகர அதிமுக செயலாளர் மூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர் சிங் மற்றும் கார்த்திக் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...