போதைப் பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தி வால்பாறையில் அதிமுக மனித சங்கிலி போராட்டம்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்கேடாக அமைந்துள்ளதாகவும், தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி வருவதாகவும், வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதாகவும் அதிமுகவினர் புகார் தெரிவித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நகரச் செயலாளர் மயில் கணேசன் மற்றும் வால்பாறை அமீது முன்னிலையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட அதிமுக கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்கேடாக அமைந்துள்ளதாகவும், தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி வருவதாகவும், வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதாகவும், போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டு உள்ளதாகவும், திமுக அரசை கண்டித்து போதைப்பொருள் பழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தி வால்பாறை அதிமுக கட்சியினர் 300 க்கும் மேற்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சுமார் 11 மணியில் அளவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்து ஆண்கள், பெண்கள் கையில் கொடி ஏந்தி கோஷம் எழுப்பி ஊர்வலமாக சென்றனர். வால்பாறை பழைய பேருந்து நிலையத்திலிருந்து மனித சங்கிலி போராட்டம் காந்தி சிலை வரை நடைபெற்றது. போதைப் பொருட்கள் மயக்கத்தில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விஜயகுமார், பொன் கணேசன், சாளவுதீன், மோகன், RR பெருமாள், ஆடிட்டர் சண்முகவேல், itwing சண்முகம், sks பாலு, சசி, ரமேஷ், பாபு, விமலா மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...