உடுமலை அருகே சின்னகுமாரபாளையத்தில் தம்பதியினரை கட்டிபோட்டு நகை கொள்ளை – மூன்று பேர் கைது

சௌந்தர்ராஜனையும், அவரது மனைவியையும் கட்டிப்போட்டு 9 சவரன் தாலிக்கொடி, வைரக்கம்மல், இருசக்கர வாகனம் மற்றும் ரூ.24000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்னகுமாரபாளையத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் சௌந்தரராஜன் குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் கதவை யாரோ தட்டியதால் சௌந்தர்ராஜனும் அவரது மனைவியும் வெளியே வந்தபோது மூன்று பேர் அவர்களை கயிற்றால் கட்டியும், கத்தியை காட்டி மிரட்டியும் 9 சவரன் தாலிக்கொடி, வைரக்கம்மல், இருசக்கர வாகனம் மற்றும் பணம் 24000/- ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து அமராவதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி உடுமலை துணை காவல் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் நிர்மலா தேவி, உதவி ஆய்வாளர்கள் சண்முக மூர்த்தி, பஞ்சலிங்கம் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தும், சம்பவ இடத்திலிருந்த கைரேகை பதிவுகளை கொண்டு மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முருகானந்தம், சிவகுமார்,சித்திரை வேல் ஆகியோர் கைது செய்தனர். மேலும் கொள்ளையடிக்கபட்ட தாலிக்கொடி, வைரகம்மல் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...