உடுமலை அருகே பாலப்பம்பட்டியில் பெட்ரோல் பங்கில் நூதன முறையில் திருட்டு -காவல்துறை விசாரணை

குளிர்பானம் கேட்பது போல் நடித்து பெட்ரோல் பங்கில் கல்லாப் பெட்டியில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற இரண்டு பேரை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடிவருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பாலப்பம்பட்டி அருகே உடுமலை-பழனி நெடுஞ்சாலையை ஒட்டியவாறு தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.இங்கு பெட்ரோலுடன் குளிர்பானம் விற்பனையும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் பங்கிற்கு இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் அடிப்பதற்காக இரண்டு ஆசாமிகள் வந்து உள்ளனர். பெட்ரோல் அடித்த பின்பு பணத்தை கொடுத்து விட்டு தாகமாக உள்ளதாகவும், அதனால் குளிர்பானம் கேட்டு உள்ளனர்.

அதைத்தொடர்ந்து பணியாளர் குளிர்பானத்தை அவர்களுக்கு கொடுத்து விட்டு பணத்தைப் பெற்று கல்லாப் பெட்டியில் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த ஆசாமிகள் கண் இமைக்கும் நேரத்தில் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ 10 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் செல்போன் மூலம் உரிமையாளருக்கு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து உரிமையாளர் உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.



அதன் பேரில் அங்கு விரைந்த போலீசார் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர்கள் எந்த வழியாக தப்பிச் சென்றனர் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பாலப்பம்பட்டி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...