ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு - உடுமலை ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு

ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நடனம், குறும்படம் மற்றும் வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி கணினி பயன்பாட்டு துறை மற்றும் டாக்டர் அப்துல் கலாம் பாதுகாப்பு சேவை அறக்கட்டளை இணைந்து இமைகள் திட்டத்தின் கீழ் மூன்றாம் ஆண்டு மாணவியர் ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நடனம், குறும்படம் மற்றும் வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபட்டது.



மேலும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பதக்கங்களை உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், பிரியா பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் முதல்வர் தவசிமணி, அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் நவநீதன், ஆடிட்டர் கண்ணன் ஆகியோர் வழங்கினர்.

ஜல்லிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி கணினி பயன்பாட்டு துறை தலைமை பேராசிரியர் முனைவர் மணிமேகலை, வடிவு, கனக துர்கா, நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...