போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து பெரியநாயக்கன்பாளையத்தில் அதிமுக மனித சங்கிலி போராட்டம்

தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி வருவதாகவும், போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறி அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தத்தவறியதாக திமுக அரசை கண்டித்து கோவை பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலூர் பகுதிகளில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



தமிழகத்தில் திமுக அரசால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி வருவதாகவும், போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறி, அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி கோவை புறநகர் வடக்கு மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



அப்போது கலந்துக்கொண்டவர்கள் திமுக அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் கே.வி.என்.ஜெயராமன், நகர செயலாளர்கள் குருந்தாசலம், ரகுநாதன், ராமதாஸ், இளைஞர் அணி இணை செயலாளர் சசிக்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.



அதேபோல நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நகர செயலாளர் ஆனந்தன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் குருடம்பாளையம் ஊராட்சித்தலைவர் டி.ரவி, ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் சிவகுமார், சைலாராணி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.



துடியலூரில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு பகுதி செயலாளர் வனிதாமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கோவனூர் துரைசாமி முன்னிலை வகித்தார்.



இதில் விவசாய அணி மாநில துணை தலைவர் சின்னவேடம்பட்டி சுப்பையன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் வீரபாண்டி விஜயன், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் டாக்டர்.துரைசாமி, மண்டல ஐ.டி.விங்க் செயலாளர் விக்னேஷ், டியூகாஸ் முன்னாள் துணைத்தலைவர் செல்வராஜ், ஊராட்சித் தலைவர்கள் ரங்கராஜ், செளந்திரவடிவு ஆனந்தன், அசோகபுரம் ஊராட்சி துணைத்தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் கவிசரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சம்பத், தீபிகா சுந்திரமூர்த்தி, பகுதி அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திரமோகன், வார்டு செயலாளர்கள் சாந்திபூசன், பந்தல்வீடு பிரகாஷ், சுரேஷ்குமார், சுரேஷ்பாபு, ஜெயகுமார், காளிச்சாமி, பகுதி அவைத்தலைவர் ஐ.டி.ஐ ஜெயராஜ், அண்ணா தொழிற்சங்க பகுதி செயலாளர் முருகேசன் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...