முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 32 வது வார்டு பகுதியில் நகர மன்ற உறுப்பினர் பெருமாள் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்துகொண்டு 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.



கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 32 வது வார்டு பகுதியில் நகர மன்ற உறுப்பினர் பெருமாள் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி மற்றும் எவர்சில்வர் தட்டுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசுகையில்., தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநில முதல்வர்கள் செயல்படுத்தி வருகின்றனர். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என தெரிவித்தார்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...