ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

விபத்தில் காயம் அடைந்தவர்களை அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு சேர்க்காமல் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு மட்டுமே காயம் அடைந்தவர்களை அழைத்துச் செல்வதாக கூறி, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். கடந்த இரண்டு மாத காலமாக விபத்து ஏற்படும் சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்லும் 108 அவசர ஊர்தி வாகன ஓட்டுனர்கள் விபத்தில் காயமடைந்த நபர்களை அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லாமல், 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட ஒரு தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

குறிப்பிட்ட மருத்துவமனையில் மட்டும் வாரத்துக்கு 60 நோயாளிகள் இதுபோன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு சேர்க்காமல் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என வாய்மொழி உத்தரவு உள்ளதாக 108 ஆம்புலன்சில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.



இதனால் உயிர் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் அனைத்து விதமான மருத்துவ வசதிகளுடன் இருக்கக்கூடிய நிலையில், வேறு எந்த மருத்துவமனைகளுக்கும், விபத்தில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுமதிக்காமல், வளையன்காடு பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்கு மட்டும் அழைத்துச் செல்வதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜீடம், திருப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...